அன்புள்ள
ஜெ,
விதுரரின் உக்கிரமான மனநிலையை வாசிக்கையில் ஆச்சரியமாக இருந்தது. அவர் இதுபோல சமநிலை
இல்லாதவராக வந்ததே இல்லை. ஆரம்பத்திலேயே நிதானமான சூழ்ச்சிக்காரராக, நல்லுணர்வுகொண்டவராக
அவர் வருகிறார். இப்போது அவர் கொந்தளிக்கிறார்.
அந்தக்கொந்தளிப்புக்கு என்ன காரணம்?
அவர்தான் சூதுக்கே போய் அழைத்துவந்தார். அந்த குற்றவுணர்ச்சிதான். பீமனோ மற்றவர்களோ
கொண்ட கோபம் கூட அந்த கையாலாகாத்தனத்தின் வெளிப்பாடுதான் என்று நினைக்கிறேன்.
விதுரரின்
அந்த பதற்றத்தையும் கொந்தளிப்பையும் மிகச்சூட்சுமமாக அவரது உடல்மொழி வழியாகவே வெளிப்படுத்திவிட்டீர்கள்.
அவர் எதையும் கவனிக்காமலிருப்பது, அரைகுறையாக வாசிப்பது, கோபத்தில் கத்தி உடனே அடங்கி
மீண்டும் கத்துவது எல்லாமே சூட்சுமமாக வந்துள்ளது.
ஜெயராமன்