Tuesday, August 2, 2016

வேதமும்சார்வாகமும்





அன்புள்ள ஜெ

வெண்முரசின் இன்றைய அத்தியாயத்தில் வரும் நுட்பமான ஒன்றை நானே உறுதிசெய்துகொள்ளவேண்டும் என நினைத்தேன். அதாவது தொன்மையான மீமாம்சகமரபின் வேத தர்சனத்துக்கும் சார்வாக மரபுக்கும் ஒரு வகையான ஒற்றுமை உண்டு. வேத தர்சனம் கர்மம் விளைவு என்னும் இன்றியமையாத தொடர்ச்சியைத்தான் சொல்கிறது. செயலுக்கு எதிர்ச்செயல் உண்டு. ஆகவேதான் வேதவேள்விக்கு நற்பயனும் உண்டு. அதை தெய்வமும் மாற்றமுடியாது. 

ஒருவகையில் பழைய வைதிகர்கள் உலகியல்வாதிகள்தான். அவர்களுக்கு விண்ணுலகம் இல்லை இங்கே பெறுவதைப்பெற்று நல்வாழ்வு வாழ்வதைத்தான் அவர்கள் சொல்கிறார்கள். அதைத்தான் சார்வாகர்களும் சொல்கிறார்கள். வேறுபாடு அவர்கள் வேளிவி செய்வதை ஏற்கவில்லை. இதை ரிச்சர்ட் கார்பே போன்றவர்கள் சுட்டிக்காட்டியிருக்கிறார்கள் என்று தேவிப்பிரசாத் புத்தகத்தில் வாசித்த ஞாபகம். தமிழிலும் இந்த நூல் வந்துள்ளது என அறிந்தேன்

சாரங்கன்