ஜெ
குயவனின் சக்கரம் வரலாற்று ஆராய்ச்சியிலே முக்கியமான ஒன்று என்று சொல்வார்கள். ஒரு நாகரீகத்தில் குயவனின் சக்கரம் இருப்பது என்பது தொழில்நுப்ட வளர்ச்சியின் ஒரு காலகட்டத்தைக் காட்டுகிறது . அதாவது பழைய கலங்களில் விளிம்புகள் நேர்த்தியாக இருக்காது. நேர்த்தியாக இருந்தால் சக்கரம் இருந்திருக்கிறது. சக்கரம் அந்தச்சமூகம் இயந்திரங்களைப்பயன்படுத்துகிறது என்பதை காட்டுகிறது. இயந்திரங்களைப்பயன்படுத்துவதென்பது சாதாரண விஷயம் அல்ல. அது இயற்கையின் விதிகளைக் கவனிக்க ஆரம்பித்துவிட்டது என்று அர்த்தம்
இன்றையகதையில் குயவனின் சக்கரம் ஒரு பெரிய உருவகமாக வெளிப்படுகிறது. இயற்கையே ஒருவகையான சுழற்சிதான் என்று அதைப்புரிந்துகொள்கிறார்கள். எல்லா விசைகளுமே சுழற்சிதான் என அந்தப்பெண் சொல்கிறாள். ஆச்சரியமான விஷயம்
மனோகர்