Friday, August 12, 2016

அனல்கள்







இன்றுள வேள்விகளில் மூன்று அனல்களும் ஒருசேர எழுவதில்லை என்னும் வரிதான் இன்றைய முக்கியமான தருணம் என நினைக்கிறேன். ஆபாம் நபாத், மாதரிஸ்வான், வாக்கு ஆகிய மூன்று அக்னிகளின் கதைகளை முன்னரும் கேட்டிருக்கிறேன். ஆனால் இத்தகைய ஒரு நுட்பமான ஸிம்பாலிக் விளக்கத்தை இப்போதுதான் காண்கிறேன்.

மண்ணில் பிறந்ததனால் செய்யப்படுவது  என்பதுதான் சாதாரணமான கர்மகாண்ட வேள்வி. அதேபோல நீரில் பிறந்தது என்பது அர்த்தங்களால் ஆன வேள்வி. வாக் என்பது அதற்கு அப்பால் செல்லும் வேள்வி. அத்தகைய மூன்று வேள்விகளும் கலந்த ஒரே வேள்வி என்பது எப்படிப்பட்டதாக இருக்கும்? அதைத்தான் கீதை என்று சொல்ல வருகிறீர்கள் என நினைக்கிறேன்

சாரங்கன்