ஜெ,
இன்றைய ஒருஅத்தியாயமே
பல கோணங்களில் சிந்திக்கவைத்தது. வெண்முரசில் தீர்க்கதமஸின் கதை வருவது இது மூன்றாவது
முறை என நினைக்கிறேன். இரண்டாம் முறை அவர் அடிப்படை இச்சைகளால் ஆன ஒரு புரிந்துகொள்ளமுடியாத
பிம்பமாக வந்தார். ஒரு தந்தைவடிவம். வீரியம் மிக்க விதை
இன்றையகதையில்
அதை விளக்கியிருக்கும் வகை மேலும் நுட்பமாக உள்ளது. தீர்க்கதமஸின் வலிமை அவர் வேதஞானி
என்பதில் இருந்தது. அத்தகைய கண்மூடித்தனமான காமம் கொண்டவர் எப்படி வேத ஞானி ஆனார் என்ற
கேள்விக்கு இங்கே விடை இருக்கிறது. அந்த வேதமரபு விழைவை மட்டுமே முன்வைப்பது. அதன்
சாரமே காமம்தான்.
ஆனால் சார்வாக
மரபு அவரை நிராகரிக்கிறது. வெறும் விழைவை நிராகரித்து வேறு ஒன்றை அது முன்வைக்கிறது.
பிரகஸ்பதி சார்வாக மரபின் முதல்குரு. அவர் தீர்கதமஸைக் குருடாக்கினார் என்ற கதைக்கு
இப்படி ஒரு விளக்கம் இருக்கமுடியும் என்பது ஆச்சரியம் அளிக்கிறது. ஆனால் மிகச்சரியானதாகவும்
தெரிகிறது
ராமச்சந்திரன்