வேதாந்தமே
சொல்வளர்காட்டில் மையத்தரிசனமாக வந்துகொண்டிருக்கிறது. ஆனால் வேதாந்தம்தான் தொடர்ச்சியாக
கிண்டல்செய்யப்படுகிறது. சூதர்கள் வழியாக எப்போதும் கிண்டல்தான் வருகிறது. இப்போது
சகாதேவனும் நக்கலடிக்கிறான்
சொல்புகாவிட்டால்
வேதாந்திகள் இல்லையென்றாகிவிடுவார்கள். கண்ணுக்கு அசைவும் வேதாந்திக்கு சொல்லாடலும் தேவை என்ற அவன் பேச்சையும்
நாலுகாலில் விழும் பூனைபற்றிய கிண்டலும் சிரிப்பை அளித்தன.
நீங்கள் வேதாந்தம்
சார்ந்த பள்ளியில்படித்தவரென்பதனால் வேதாந்தத்தைப்பற்றிய கிண்டல்களை நிறையவே கேட்டிருப்பீர்கள்
என நினைக்கிறேன்
ஆனால் கிருஷ்ணனே அந்தக்கிண்டல்களை சொல்லும் இடங்களும் வெண்முரசில் வருகிறது. கிருஷ்ணனும் சிரிப்பும் சேர்த்தே சொல்லியிருப்பான்
ஜெயராமன்