அன்புள்ள ஜெமோ,
சிவன் அர்ச்சுனனுக்கு பாசுபதத்தை வழங்கும் காட்சியைப்பார்த்ததும் கொஞ்சம் அதிசயித்துப்போனேன்.
காண்டவத்தில் நாகர்களை அழித்த விஜயன் பன்னக நாகர்களின் தலைமைத்தெய்வத்திடமேஅதிசய அஸ்திரங்களைப்பெற்ற அரசியலை நீங்கள் விவரிப்பதைக்கேட்க ஆவலாயிருக்கிறேன்.
திருவாசகத்தில் இடம்பெறும் பல சிவனைத்துதிக்கும் வரிகளில் என் மனதில் ஆழமாகப்பதிந்தது
'வான நாகர் மருந்தினை' என்னும் சொற்றொடர். வான நாகர் என்பவர் யார் என்று பல நாட்கள் நான் சிந்தித்தும் விளங்காத போது நீங்கள் எழுதி இடையில் நிறுத்திய காண்டவத்தின் முந்தைய பகுதியின் அத்தியாயங்களில் மலைகளை வெல்ல உடலெங்கும் நீறு பூசிய நாகர் தலைவனாக சிவன் வெளிப்பட்ட காட்சி விடையளித்தது. அந்த வான நா கர் மருந்தை மீண்டும் காண்பேன் என்ற ஆவலுடன் காத்திருக்கிறேன்.
அன்புடன்,
ஜெய்கணேஷ்.