Monday, November 7, 2016

சொல்



பெருமதிப்பிற்குரிய ஜெமோ.அவர்களுக்கு,

வணக்கம்.

'வெண்முரசில்' எனக்கு மிகவும் பிடித்தது, நீங்கள் உருவாக்கும் அழகழகான தமிழ்ச்சொற்கள் ஆங்காங்கே நட்சத்திரங்களாக மின்னித் தெறிப்பது!.மேலும் வடமொழிச்சொற்களுக்கு மாற்றாக அதைவிட இனிமைதரும் தமிழ் சொற்கள்.அண்மையில் அப்படி கிடைத்த ஓன்று (வாசகி ஒருவர் ஏற்கனவே பாராட்டியதுதான் )"சிவோஹம்" என்பதற்கு மாற்றான ''சிவமேயாம்" என்பது.ஆனால் இன்று நான் கண்டது வழக்கமாக புழங்கி வரும் இனிய தமிழ் சொல்லான "மழலை" என்பதற்கு மாற்றாக அதைவிட இனிமையான  "நாதிருந்தாக் குரல்"(அன்னையரின் உள்ளத்தை எவ்வண்ணமோ உணர்ந்து அவர்கள் இடையிலிருந்த ஆண் குழவிகள் ஓசையிட்டன. அன்னையரின் கன்னங்களைப் பிடித்து தங்களிடம் திருப்ப முயன்றன. இடைகளில் கால்களை உதைத்து எம்பிக் குதித்தன. அர்ஜுனனை நோக்கி கைநீட்டிநாதிருந்தாக் குரல் எழுப்பின).

நான் அறிந்தவரை 'மழலை' என்ற சொல்லுக்கு குழந்தைகளின் குளறல் பேச்சு அல்லது குதலை பேச்சு என்பதுதான் ஆனால் இது மிகவும் ஏற்புடையது.

அன்புடன்,

அ .சேஷகிரி