பானுமதி அம்மா அவர்களின் பேச்சு என்னை மிகவும்
கவர்ந்தது. நான் கிராதம் இன்னும் படிக்கவில்லை இருந்தும்
கலந்துரையாடல் கூட்டம் எப்படி இருக்கும் என தெரிந்து கொள்ளவும்
படிக்கவும் ஆர்வமிருப்பதால் சென்றேன்.
யமபுரி, கிராதசிவம், தென்திசை பயணம், தென்திசை ஏன்?
காலன், கால பைரவன், பிச்சாண்டவர் , கபாலம், இருமை/ஒருமை , என ஒரு
மணி நேரத்துக்குள்ளேயே கற்பனையில் மனம் எங்கெங்கோ பயணப்பட்டது.
இடையில் அருணாவும் சில விஷயங்களை பேசினார். எனக்கு ஒரு மணிநேரத்தில்
பலரின் சொற்பொழிவைக்கேட்ட உணர்வு. தங்களின் எழுத்து எனக்கு பலரை
அறிமுகம் செய்துள்ளது. பானுமதி அம்மாவின் சில எண்ணங்களும் அவரின்
புரிதலும் ஒரு உரையாசிரியருக்கானவை. ஆர்வத்தை தூண்டுபவை.
தங்களுக்கும் தங்கள் வாசக வட்டத்துக்கும் மிக்க நன்றி.
அன்புடன்
பகவதி
பகவதி