Saturday, March 25, 2017

அன்னைப்புலி



தேவயானி பிறந்ததும் பால் அருந்தவென்று அழைத்துவரப்பட்ட  அன்னைப்புலியினை சார் விவரித்தது அத்தனை அழகு.நாவால் முகமயிரையும் தாடையையும் நக்கும் புலி அதன்  சிப்பி விழிகள், இமைப்பாலாடைகள், national geographic channel  பார்த்துக்கொண்டிருப்பது போலவே இருந்தது புலியைப்பற்றிய காட்சி சித்தரிப்புகள்
சிறு செவி மடித்து தலை குலுக்கி ஓசை எழுப்புவது,., நீருக்குள் மீனெனெ பின்வாங்கி மறைவது, தேவயானி புலிக்குட்டிகளின் காலைப்பிடித்து அவற்றின் மேல் தவழ்ந்தேறி கைகளை காலுக்கு நிகராக தொஙவிட்டபடி ஊர்ந்து செல்வதெல்லாம் வாசிக்கையில் அப்படியே படமெனெ கண்முன்னால் விரிகிறது.
சருகசையாது அணுகும் இளங்காற்றுபோல் ஓசையின்றி என்றுஅவற்றின்  நடையை சொல்கிறார், மல்லாந்தும் ஒருக்களித்தும் விழிசுருக்கி மூடி முகவாய்மயிர் சிலிர்க்க தோளும் பிடரியும் விதிர்க்க, சிற்றுயிர்களை விரட்ட சிற்றிலைச்செவிகள் குவிந்தும் விலகியும் ஒலிகூர இளவெயிலில வேங்கைகள் படுத்திருப்பது, உடுக்கு ஒலியுடன் உடலை அசைப்பது, கசனுடன் சண்டையிடுகையில்  சார் விவரிப்பில்,அப்படியே  நேரிலென அதை நான் பார்க்கமுடிந்தது. பின்னர் பொய்க்கடி கடித்துக்கொண்டு மூன்றும் விளையாடியது அத்தனை அழகாயிருந்தது

அத்தனை சித்தரிப்பிலும் உச்சகட்டமாகஅமைந்தது. இன்றைய பகுதியில் நிலவின் ஒளியில் அவற்றின் மென்மயிர்ப்பிசிறுகள் வெண்ணிறப் புல்விதைச் செண்டுகள்போல் ஒளிவிட்டதும். அதிலொன்று மெல்ல திரும்பியபோது இருவிழிகளும் அனனெல சுடர்கொண்டு அணைந்ததும்  அருமை என்பதைத்தவிர வேறென்ன சொல்வதென்றே தெரியவில்லைஅப்படியே இக்காட்சி மனதில் அழியாப்புகைப்படமாக நிலைத்துவிட்டது

லோகமாதேவி