ஜெ
திரௌபதி யானைமேல் ஏறி நின்று அரசியை எதிர்கொள்ளும் இடம் அற்புதமான
ஒன்று. என்னால் அந்த காட்சியை மறக்கவே முடியவில்லை. பட்டத்து யானை என்பது அரசாங்கமேதான்.
அது அவளைத்தான் அரசியாக ஏற்கிறது. குழந்தைகளுக்கு தெரியவருவதுபோல மிருகங்களுக்கும்
எது அதிகாரம் என தெரிகிறது என தோன்றியது. அவள் மேலே எழும் அந்தக்காட்சி ஒரு நல்ல சினிமா
போல நினைவில் நின்றது
அதோடு அவள் அரசியைப்போலவே பேசுகிறாள். நீ கேட்டது கிடைக்கும்
என அரசியிடமே சொல்கிறாள். உத்தரன் அரசன் ஆவான் என்று. காரணம் அவள் ஒரு அரசனின் மனைவி.
அவன் பீமன். ஆனால் சக்ரவர்த்தினியை உருவாக்கும் அவன் சக்ரவர்த்தி அல்ல. காட்டுமனிதன்.
அவனும் . ஒரு யானைஅவன் அவளுக்குப்பணிவது பீமன் பணிவதுபோல. அன்பால் பணிவது அது
செந்தில்