அன்புள்ள ஜெமோ
கரவுக்காடு பகுதி
அருமையாகத் திரண்டு வருகிறது. ஆரம்பத்தில் அந்தக்காட்டைப்பற்றி ஏன் இத்தனை சொல்லப்படுகிறது
என்று தோன்றியது. வெளியே வெள்ளியாக இருப்பதெல்லாம் உள்ளே பொன்னாக ஆகிறது அந்தககட்டில்.
அந்தக்காடு அந்த நகரத்தின் சப்கான்ஷியஸ் என்று பிறகு புரிந்தது. அங்கே ஏதோ நிகழப்போகிறது.
அதை நீங்கள் விரிக்கமாட்டீர்கள். காட்டைமட்டும் சொல்லி மற்றதை ஊகிக்கவிட்டுக் கடந்துசெல்வீர்கள்
என நினைக்கிறேன். ஆனால் அந்தக்காடு ஒரு பெரிய ஃபினாமினன் ஆக எழுந்துவருவது அழ்காக இருக்கிறது
சத்யமூர்த்தி