ஜெமோ,
இன்று நடந்த சென்னை வெண்முரசு விவாதக் கூட்டத்தில் ஒரு இனிய அதிர்ச்சி. முதல் முறையாக அஜிதனை நேரில் சந்தித்தேன்.
எனக்கு
அருகாமையில்தான் அமர்ந்திருந்தார். கையில் உடலின் இயங்கியல் கூறுகள்
பத்தின ஒரு புத்தகத்தினுடமும், எக்ஸிஸ்டென்சியலிசம் பற்றியும் ஒரு இளமை
வெட்கத்துடனும் பேசும்போதே தெரிந்திருக்கனும் எனக்கு. ஆனாலும் சீனிவாசன்
வந்து சொல்லும்வரை எனக்குப் புலப்படவில்லை. அந்த மூக்க பார்த்தாவது
கண்டுபிடித்திருக்கணும்.
தன் தந்தையின் படைப்புகளை இவ்வளவு ஆழமாக விவாதிப்பதை நேரில் இருந்து பார்க்கும் பாக்கியம் Celebrityன் வாரிசுகளுக்கு மட்டுமே உண்டு.
சிறிலும்,
ராஜகோபாலும், காளிராஜும், சௌந்தரும் வெண்முரசின் நுட்பங்களை விவரித்ததை
எங்களை போல் உங்களின் ஒரு வாசகராகவே உண்ணிப்பாக கவனித்துக் கொண்டிருந்தார்.
அன்புடன்
முத்து