Tuesday, August 1, 2017

நாகவிளையாட்டு






அன்புள்ள ஜெ

வெண்முரசில் நாகம் வரும் இடங்கள் எல்லாமே மர்மமானவை. ஒன்றுடன் ஒன்று அவற்றைத் தொடர்புகொள்ளச்செய்தால் வரும் அர்த்தம் முற்றிலும் வேறானதாக உள்ளது. இன்றைய அத்தியாயத்தில் தமயந்தியை ஆட்டிப்படைக்கிறது நாகம். முன்பு பீமன் ஆரியகன் என்ற நாகத்தில் இருந்துதான் கசப்பைப் பெற்றுக்கொண்டான். ஆழத்திற்குச் சென்று அதை அவன் அடைந்தான். அதேபோன்ற ஆழத்துக்கு அர்ஜுனனும் செல்கிறான். இந்த நாகம் எது? அதை முதற்கனலிலேயே சொல்லிவிட்டீர்கள். மனிதரில் இருந்து அழிக்கமுடியாத நஞ்சு. அழித்துவிடக்கூடாத இறுதிவிஷம். மகாபாரதப்போரே இந்த நாகவிளையாட்டுத்தான்

ஜெயராமன்