Friday, August 4, 2017

இடைச்செருகல்






அன்புள்ள ஜெமோ

வெண்முரசில் ஒவ்வொன்றும் ஒன்றுடன் ஒன்று சென்று பொருந்தி பிரம்மாண்டமான ஒரே சித்திரமாக ஆகிக்கொண்டிருக்கின்றன. அந்த ஆச்சரியத்தை எவ்வளவு சிந்தித்தாலும் தீரமாட்டேன் என்கிறது. மகாபாரதத்தில் விராடபருவம் பெரிய இடைச்செருகல் என்கிறார்கல். ஏனென்றால் பாஞ்சாலியை கௌரவசபையில் துகில் உரிகிறார்கள். அதன்பின்னர் விராடநகரில் மீண்டும் கீசகன் அதைச் செய்கிறான். இது மிகப்பெரிய விந்தை. அப்போதும் பீமனும் தருமனும் ஒன்றும் செய்யாமலிருக்கிறார்கள். இந்தச்சிக்கலை நீங்கள் எப்படி சமாளிக்கிறீர்கள் என்ரு பார்க்கலாமென நினைத்திருந்தேன். நீங்கள் முன்னாடியே தருமன் சகுனியாக ’மாறி’ விட்டான் என்று சொன்னதைக் கவனிக்காமலிருந்தேன். அவன் நடந்துகொள்ளும் முறை அடடா என நினைக்கவைத்தது

சாரங்கன்