அன்பின் ஜெ,
வணக்கம்!.
பிறப்பும் இறப்பும் வெண்முரசின் காலக்கண்ணாடியில் இடைவிடாது தோன்றி மறையும் பிம்பங்கள் எனினும் அனகையின் மறைவு எளிதாக கடந்து செல்ல கூடியதல்ல.
கௌந்தவனத்தில் கர்ணனை
கருக்கொண்டிருக்கும் குந்திக்காக மழையிரவில் மருத்துவச்சியை தேடும் அணுக்கசேடியாய் வெளிப்படுபவள்
அனகை.
{
"சிதையில் அனகை பிறிதொரு விறகுபோல வைக்கப்பட்டிருந்தாள்"
}
ஒரு பெருமரம் சிறு விறகென ஆகிவிட்டது.
நீரில் தோன்றியவள் நெருப்பில் மறைகிறாள்.
மழைப்பாடலில் தனியொருத்தியாய்
மரம் ஒன்றை உருட்டி பர்ணஸா நதிமேல் பாலம் அமைத்தவள் எழுதழலில் விறகென்றாகி விண் செல்கிறாள்.
{
அனகை "பெருந்தோள்கள்" என்றாள்.
}
அச்சொற்க்கள் பீமனுக்கு மட்டுமேயானதா?.
மண்ணிலும் எஞ்சாது
மறையப்போகும் மந்தணத்தை அறிந்த பிறிதொருவர் உண்டா?.
நட்புடன்,
யோகேஸ்வரன் ராமநாதன்.