அன்புள்ள ஜெ,
வெண்முரசு வெவ்வேறு வகையான பெருந்தன்மைகளை எழுதிக்காட்டிக்கொண்டே இருக்கிறது. திருதராஷ்டிரன் துரியோதனன் பலராமர் போன்றவர்கள் அனைத்துவகையான கோபதாபங்களையும் கடந்து அடிப்படையில் பெருந்தன்மையானவர்களாகவே இருக்கிறார்கள். எப்போதுமே தந்தைகளாகவும் ஆசிரியர்களாகவும்தான் இருக்கிறார்கள். அந்த பெருந்தன்மையின் சித்திரங்களை சாமானிய வாசகர்கள் உணர்ச்சியுடன் எதிர்கொள்கிறோம்.
ஆனால் அது காட்டும் சின்னத்தனங்களில் சித்திரங்களுக்கும் அளவே இல்லை. பலவகையான குலத்தலைவர்கள் அவர்களின் சிறுமைகளுடன் வந்திருக்கிறார்கள். இப்போது கிருஷ்ணனின் எல்லா மைந்தர்களுமே சிறுமைகளுடன் மட்டுமே வருகிறார்கள். ஒவ்வொருவரும் ஒவ்வொருவகை. இயல்பிலேயே சின்ன மனிதர்கள். பெரியவிஷயங்களை காணும் கண்கள் இல்லாதவர்கள்
அவர்களில் மிகச்சிறிய உள்ளம் குந்திக்குதான் என தோன்றுகிறது
ஆர்.ராஜசேகர்