அன்புள்ள ஜெ
கடைசிமுயற்சியாக வேண்டாவெறுப்பாக யுதிஷ்டிரர் மதுராவுக்கு அர்ஜுனனை தூதனுப்புகிறார்.
அந்தப் பயணத்துடன் என்ன நிகழப்போகிறது எவரெவர் அணிசேர்கிறார்கள் என்பதெல்லாம் முடிவாகிவிடும்
என்பது மகாபாரதத்தின் கதை. தெரிந்தகதை. ஆனால் அது பாண்டவர்களின் மகன்களின் பார்வை வழியாக
வரும்போதுதான் வேறு அர்த்தம் அடைகிறதென நினைக்கிறேன். இந்தப்போரில் ‘வீணாக’ அழிவது
அவர்கள்தான். அவர்களுக்கு எந்தப்பகையையும் காணவில்லை. அவர்களுக்கு பெரிய அளவில் மண்ணாசையும்
இல்லை. ஆனால் அவர்கள் அழிக்கப்படுகிறார்கள்.
ஒன்பதுபேரில் அபிமன்யூ சதானீகன் இருவருடைய குணாதிசயங்கள்தான் நுட்பமானவை அழகானவை
என நினைக்கிறேன்
செந்தில்