ஜெ
பீமன் தன் மகனை
எதிர்கொள்ளும் இடம் அழகானது. அவனை ஒரு சகமல்லன் என்று அவன் எண்ணுவான் என நினைக்கையில்
அவன் தன் மகனின் மிகப்பலவீனமான இடத்தை அனிச்சையாகத் தொட்டுப்பார்க்கிறான். அந்த இடத்தில்
வெறும் தந்தையாக ஆகிறான். அல்லது மற்போர் அறிந்த தந்தையாக மாறிவிடுகிறான். இந்த மாயை
தான் பீமனை கட்டிப்போட்டிருக்கிறது. கடைசிவரை அவனால் விடுதலைபெறமுடியாமலும் ஆக்குகிறது.
அவன் மாமலர் தேடிச்செல்பவன். ஞானத்தை வேண்டாம் என்று சொல்லிச்செல்பவன் இல்லையா?
ராஜ்