கிருஷ்ணையின் மணவிழாவையொட்டிய நிகழ்வுகளின் உச்சத்தை அங்கனின் அகம் உணர்ந்ததாலேயே சம்பாபுரியில்
சயனம் கொண்டிருக்கிறான் போலும்.
இளைய யாதவர் அங்க இளவரசர்களை உச்சிமுகர்வதையும், உபபாண்டவர்களும்,உபகௌரவர்களும், அங்க இளவரசர்களோடு ஒற்றைப்பெருக்கென மனம்கோர்த்து நிற்பதையும் கண்டு சல்லியரைப்போல,
பலராமரைப்போல தானும் ஒரு கணமேனும் நிலையழியக்கூடும் என்ற அச்சத்தினால் அஸ்தினபுரிக்கு வராமல் இருக்கிறான் என்று எண்ணத்தோன்றுகிறது.
-யோகேஸ்வரன் ராமநாதன்