Wednesday, November 22, 2017

விடை

ஜெ


அஸ்தினபுரிக்குள் நுழையும் பிரதிவிந்தியன் அடையும் ஞானம் அவனை அவன் தந்தையை விட ஒரு படி மேலானவன் ஆக ஆக்குகிறது. யுதிஷ்டிரனுக்குத்தெரியாதது மக்கள் விராடவடிவமான தெய்வம்தான் என்பதுதான். அவன் அவர்கள் தன்னை வழிபடுகிறார்கள் என எண்ணி தெய்வமாக அவதற்காக போராடிக்கொண்டிருக்கிறான். ஆனால் அவருக்குள் இருக்கும் மனித இயல்பு அதற்கு விடுவதில்லை. அதுதான் அவருடைய போராட்டம். ஆனால் மானுடத்தை தெய்வமாக நினைத்துவிட்ட பிரதிவிந்தியன் கைகூப்பி அதன் முன் தன்னை சாமானியனாக நிறுத்திக்கொள்கிறான். அவனுக்கு எந்தப்பிரச்சினையும் இல்லை.

பாண்டவர்கள் அனைவருக்குமே பலவகையானபிரச்சினைகள் உள்ளன. அவர்களின் உருவமாகவே இருக்கும் உபபாண்டவர்கள் அந்தப்பிரச்சினைகளில் இருந்து மிக இயல்பாக விடுபடுகிறார்க்ள். பாண்டவர்கள் தேடும் விடையாக அவர்கலின் மைந்தர்கள் இருக்கிறார்கல்
மகாதேவன்