ஜெ
மதுராவின் நிகழ்வுகளை கிட்டத்தட்ட முள்முனையில் நின்று வாசித்துவந்தேன். பதற்றமும்
ஆர்வமுமாக நண்பர்களுடன் பேசிக்கொண்டிருந்தேன். இத்தனைக்கும் நான் மகாபாரதத்தை பலமுறை
முழுமையாகவே வாசித்தவன், சிலமகாபாரதப்பேருரைகளும் ஆற்றியிருக்கிறேன். இப்போது ஊரில்
இல்லை. சின்னவயதில் எங்களூரில் மகாபாரதம் முற்றோதும் வழக்கம் இருந்தது.
நன்றாகத்தெரிந்த கதை. ஆனால் அத்தனை திருப்பங்களும் புதியவை. அத்தனை மனவிளையாட்டுக்களும்
மிகமிக நம்பகமானவை. அர்ஜுனன் முதல் அத்தனைபேரும் சொல்லும் தரப்புக்களும் அவரவருக்குரிய
முழுமையான நியாயங்களுடன் சரிதானே என்று சொல்லும்படி அமைந்துள்ளன
அர்ஜுனனுடையது கண்மூடித்தனமான பக்தி. அப்படி ஒரு பக்திதான் அவனை அணுகி அறியமுடியும்.
கண்மூடித்தனம் இல்லாமல் பக்தி என்பதே கிடையாது என்பதுதான் உண்மை
ரங்கநாதன்