ஜெ
பிரத்யும்னன் கிருஷ்ணனைப்பற்றிச் சொல்லும் இடம் மிக முக்கியமானது. எனக்கு அது
காந்தியை ஞாபகப்படுத்தியது. காந்தியின் மைந்தர்கள் எப்படி காந்தியைப் பார்த்திருப்பார்கள்.
எங்களுக்கு அப்பா என்று ஒருவர் இருந்ததில்லை என்று தேவதாஸ் காந்தி சொல்லியிருக்கிறார்
அதேபோல எல்லாருமே காந்தியிடம் ஊரைவிட்டுக்கிளம்பிச்செல்லுங்கள், காட்டுக்குச்செல்லுங்கள்
என்று சொன்ன காலம் ஒன்று வந்தது. காந்தியே கடைசி உரையில் மனம் வருந்தி என்னிடம் காட்டுக்குச்செல்லும்படிச்
சொல்கிறார்கள். என்னால் செல்லமுடியாது. என் வேலைமுடியவில்லை என்று சொன்னதை வாசித்திருக்கிறேன்
சபரி