வாரணாவதம் பற்றி பிரயாகையில் பின்வரும் திருதராஷ்டிரரின் மனநிலைக்கும், இன்றுபடித்த திருதராஷ்டிரரின் மனநிலைக்கும் இடையேயான மாறுபாட்டை கவனித்தேன்....
பிரயாகையில் விதுரரின் சொற்களில்....
இது நகைப்புக்குரியதல்ல. அவர் முதலில் கழுவேற்றப்போவது தன் நூறு மைந்தரைத்தான்
அவருக்குத்தேவை பாண்டவர்களை எரிக்க முனைந்தவர் எவர் என்ற சான்று. மறுகணமே ஆணையிட்டுவிடுவார். நான் அவரை அறிவேன்.
இன்று திருதராஷ்டிரரின் சொற்களி ல்....
“நான் செய்திருக்கவேண்டியது ஒன்றே. எப்போது என் மைந்தன் சூழ்வோர் சொல்கேட்டு பாண்டவரை வாரணவதத்தில் மாளிகையுடன் எரிக்க முயன்றானோ அன்றே அவனை காட்டுக்கு அனுப்பியிருக்கவேண்டும். மண்ணை யுதிஷ்டிரனுக்கு அளித்திருக்கவேண்டும். அறம்மீறி மண்ணை அடைந்தவன் அம்மண்ணில் எந்த அறத்தையும் பேண முடியாது.
அவனை கொல்ல ஆணையிடலாம், என்னாலோ இங்குள்ள பிறராலோ அது இயல்வதுமல்ல
எவராயினும் என் மைந்தரைக் கொன்றவர்களை நான் பொறுத்துக்கொள்ள மாட்டேன். அவர்கள்மேல் என் தீச்சொல் என்றுமிருக்கும். விண்ணிலிருந்து அவர்கள் அளிக்கும் நீர்க்கொடையை மறுப்பேன்.
இந்த மனமாற்றம் திருதராஷ்டிரரு க்கு எந்த கணம்் நிகழ்ந்திருக்கும்? தன் மகனை அதன் பொருட்டு தண்டிக்க தயாராக இருந்த ஒருவர், எப்படி, ஏன்் மாறினார்???
எப்போதும் ஹஸ்திக்கு நிகராக இருந்த ஒருவர், இன்று தன் மைந்தரின் பொருட்டு தம்பியின் மக்களையும் பிற அனைவரையும் தீச்சொல்லிட தயாராகிவிட்டார்...
பிறர் அழிந்தாலும், தன் மக்கள் வாழ வேண்டுமென்னும் நிலையே மானுட மனமா???
இவற்றை படித்தபோது சுரேஷ் ப்ரதீப் அவர்களின் கடிதமே நினைவுக்கு வந்தது http://www.jeyamohan.in/95229# .WktDR4FX7qB
திருதராஷ்டிரருக்கு இருப்பது சுபாவத்தில் உறையும் தீங்கா அமைப்பில் உறையும் தீங்கா....
அன்புடன்
கோ. வீரராகவன்.