ஜெ
இன்றைய அத்தியாயத்தை
வாசித்து முடித்ததுமே மனதிலெழுந்த கேள்வி ஏன் திருதராஷ்டிரர் காந்தாரியிடம் சஞ்சயன்
செல்வது தெரியக்கூடாதென்று சொன்னார் என்பதுதான். கணவனைப்போல மனைவியை அறிந்தவர் யார்
என்று அதற்கு பானுமதி பதில் சொல்கிறார். மிகமுக்கியமான வரி அது என நினைக்கிறேன். அவருக்குத்தெரியும்
காந்தாரியின் மேலே இருக்கும் சாம்பலின் குளுமைக்குள் இருக்கும் தீயைப்பற்றி. அதுதான்
காரணம் என நினைக்கிறேன்
மகேஷ்