Saturday, March 31, 2018

துயர்



அன்புடன் ஆசிரியருக்கு 

இன்றைய இமைக்கணத்தின் அத்தியாயத்தை வாசித்தபோது பெரும் ஏக்கமும் துயரும் வந்து சூழ்ந்து கொண்டது. ஒருவேளை அது இப்படி முடிந்திருந்ததால் நன்றாக இருந்திருக்குமோ என்று தோன்றியது. ஆனால் குந்தியில் திரௌபதியில் ஊறியது அல்லவா அந்த வஞ்சமும் பழியுணர்வும். 

இந்த அத்தியாயத்தை இறப்பு நின்று போன முதல் அத்தியாயத்துடன் இணைத்து கொள்ள முடிந்தது. பெருமானுடர்கள் அடையும் துயரால் மட்டுமே மானுடம் முன் செல்கிறது. அவர்கள் தங்கள் திறனால் நிறைவடைந்தால் உயிரியக்கம் நின்று போகும் என்று தோன்றியது .

அன்புடன் 

சுரேஷ் பிரதீப் 

Friday, March 30, 2018

பன்னிருகால்



அன்புள்ள ஜெயமோகன்,

இன்றைய வெண்முரசு அத்தியாயத்தை படித்த போது சட்டென இன்னொரு கேள்விக்கு விடை கிடைத்தது. 'பன்னிரு கால்களுடன் விரையும்புரவியில் அமர்ந்திருக்கும் நாங்கள் காலமின்மையை உணர்வதெப்படி?' என்ற வரி படித்தவுடன் சட்டென ரு மின்னதிர்வு.

ஈராறு கால்கொண்டெழும் படித்த போது உங்களுக்கு ஒரு கடிதம் எழுதியிருந்தேன்அதில் ஒரு விஷயம் விட்டுப் போனதுஉங்களுடையஎல்லா டைப்புகளையும் படித்தவுடன் முதலில் நான் செய்வது அப்படைப்பை அதன் தலைப்புடன் ஒப்பிட்டுக் கொள்வதுதான்படைப்பின்மையம் எப்பொதும் அதன் தலைப்பை ஒட்டியே இருக்கும்அதன் சாரத்தை தலைப்புடன் தொடர்பு படுத்தி ஒரிரு வரிகளாக சுருக்கி நினைவில்வைத்துக்கொள்வேன்ஆனால் இக்குறுநாவலை வ்வாறு செய்ய முடியவில்லைகாரணம் அதன் தலைப்பு சுட்டும் பொருள் விளங்கவில்லைஅதையும் அக்கடிதத்தில் சுட்ட நினைத்தேன்மறந்துவிட்டதுஇன்று அதற்கான விடை கிடைத்து விட்டது. :‍) காலத்தையேஅந்த பன்னிரு கால்கொண்ட புரவி சுட்டுகிறது இல்லையாஅப்பன்னிரு கால்கள் பன்னிருஆரங்களாக சுழலும் காலச்சக்கரத்தின் ஒப்பீடல்லவா.

அப்படிப் பார்த்தால் விரையும் காலத்தில் தனக்கான அறிதலின் காலமின்மை சாஸ்தாகுட்டிப் பிள்ளைக்கு கிடைக்கவேயில்லைஇவ்வளவுவருட வாழ்க்கையில் தனக்கான அந்த ஒருக் கணம் நிகழவேயில்லைதன் வாழ்நாள் எல்லாம் அலைந்தது ஞானமுத்துனுக்கு வாய்த்ததுபோன்ற‌ அந்த ஒரு கணத்திற்குத்தான்தன் அகம் அழியும் அந்த‌ ஒரு நொடிபல்வேறு திசைகளில் அலைந்து தன் தடத்தை கண்டுகொள்ளும்முன் தனக்கான காலம் விரைந்தழிந்து விட்டதுஇப்போது தோன்றுகிறது நவீனத்துவ நோக்கில் காலத்தின் இரக்கமின்மையை சுட்டும்படைப்பாகவும் இக்குறுநாவலை வாசிக்கலாமென்று.

அன்புடன்,
பாலாஜி பிருத்விராஜ்

அடிப்படைவினா




அன்புள்ள ஜெ

இன்றைய அத்தியாயத்தில் கர்ணன் சொல்லும் ஆவேசமான கேள்விகள், வாதங்கள் எல்லாம் வேதாந்தம் மீது எப்போதுமே சாதாரணமானவர்கள் முன்வைப்பதுதான். இதெல்லாம் வாழ்க்கைக்கு உதவுமா என்ற கேள்வி எழாமல் வேதாந்தத்தைப்பற்றிப் பேசவே முடியாது. அன்றாடவாழ்க்கையைக் கவனிப்பவன் இந்தத் தத்துவமெல்லாம் சுரண்டலுக்கும் அடக்குமுறைக்கும் முலாம்பூசுவதே என்றுதான் நினைப்பான். மார்க்சிய தத்துவவாதிகள் இதைத்தான் சொல்கிறார்கள். தேபிபிரசாத் சட்டோபாத்யாய போன்றவர்கள் இந்தியத்தத்துவத்தில் நிலைத்திருப்பவையும் அழிந்தவையும் போன்ற நூல்களில் இதையே ஒரு நிலைபாடகச் சொல்கிறார்கள். மக்கள் ஒடுக்கப்படுகையில் பசிக்கையில் இதெல்லாம் என்ன கொடுக்கும் என்பதுதான் வேதாந்தம் எதிர்கொள்ளவேண்டிய முதல்கேள்வி

ஜெயச்சந்திரன்

அர்ஜுனனும் கர்ணனும்




ஜெ

கர்ணன் கேட்கும் கேள்விகள் அவனுடைய ஒட்டுமொத்த வாழ்க்கைப்பின்னணியில் இருந்து வருபவை. அவனுடைய வாழ்க்கையைத்தான் அவன் கேட்கிறான். ஆனால் அது அர்ஜுன விஷாத யோகத்தில் அர்ஜுனன் கேட்பதைவிட கூர்மையாக அதே தரப்பை முன்வைப்பதாக இருக்கிறது என்பது ஆச்சரியமாக உள்ளது.
கர்ணன் தத்துவத்தேடலே இல்லாதவனாகத்தான் காட்டப்பட்டிருக்கிறான். அவன் கேட்பது நடைமுறை வாழ்க்கையிலே பூதாகரமான நின்றிருக்கும் அவனுடைய சிக்கலுக்கான கேள்வி. அதேசமயம் அது பிறப்பால் கட்டுண்டிருக்கும் அனைவருக்குமான கேள்வியாகவும் உள்ளது

செல்வன்

வினாக்கள்



அன்பிற்கினிய ஆசான் அவர்களுக்கு, 
                                           

தங்கள் நலமறிய விழைகிறேன். இன்றைய வெண்முரசு அத்தியாயம் ஒரு மகத்தான இலக்கிய உச்சம். 
              

துயரின் உச்சத்தை வாழ்நாள் எல்லாம் அனுபவித்த ஒரு மாவீரன், தன்னை ஆட்கொண்ட இழிவுகள் அத்தனையில் இருந்தும் தன்னை மீட்டுக் கொள்ளும், ஒரு கிடைத்தற்கரிய வாய்ப்பை, நழுவ விட்ட மகத்தான சிறுமை அது.   
              

அர்ஜுனன் அடைந்தது மகத்தான தடுமாற்றம். மெய்ம்மை அவனுக்கு உரைக்கப்பட்டது. கர்ணன் அடைந்தது மகத்தான சிறுமை. இறவாப் புகழ் அவனுக்கு கொடுக்கப்பட்டது. 
             

இருண்ட வெளியை நோக்கியபடி இருளில் மூழ்கிய கர்ணன் உலகியல் வாழ்க்கையில் சிக்கி உழலும்  ஒரு எளிய மனிதனாக சிறுத்துப் போவதன் துயரம் தாள முடியாதது. 
           

வாழ்நாள் எல்லாம் தியானிக்க வேண்டிய மகத்தான தரிசனம் இதில் உள்ளது.
                                          

தங்கள் அன்பு மாணவன்,
                                                             
இ.மாரிராஜ்

மரணமெனும் அமுது



இனிய ஜெயம் 

பொதுவாக நள்ளிரவில் வெண் முரசு வாசித்து , தூக்கத்தை தொலைத்து ஸ்தம்பித்து கிடக்கும் வாய்ப்பு ,இன்னொரு முறை இன்றைய அத்யாயத்தால் வாய்த்தது .

குடல் புற்று நோய் .அதன் இறுதி கட்டம் . மருந்துகள் பலனளிக்காமல் ,வலியுடன் மரணம் வேண்டி காத்திருந்த நோயாளி ஒருவரை அருகிலிருந்து கண்டிருக்கிறேன் .

கொஞ்சோண்டு விஷம் குடுங்கடா என பிள்ளைகள் வசம் வலியுடன் அழுகையுடன் மந்திரம் போல அதையே திரும்ப திரும்ப சொல்லிக்கொண்டிருப்பார் .

அது விஷம் அல்ல .அவரது நிலைக்கு மீட்பளிக்கும் அமுது அது என இன்றைய அத்யாயம் புரிய வைத்தது .

// அருகருமே அமர்ந்து தியானிகனும் பிரபாவனும் வானை நோக்கிக்கொண்டிருந்தனர். அதுவரை கருமுகில்கள் மூடியிருந்த வானம் மெல்ல விரிசலிட்டு வாயில்திறக்க ஒளிபெருகி மண்ணில் படிந்தது. அதனூடாக ஒரு கரியதேர் அணுகிவந்தது. வியாதி, ஜரை, உன்மாதை, பீடை, விஸ்மிருதி, பீதி, ரோதனை என்னும் ஏழன்னையர் இழுத்த தேரில் நீண்ட செங்கூந்தல் திசைமுடிவுவரை பறக்க, ஒருகையில் தாமரை மலரும் மறுகையில் மின்படைக்கலமுமாக மிருத்யூதேவி அமர்ந்திருந்தாள். அவள் உதடுகள் குருதிகொண்டவை என சிவந்திருந்தன. கண்கள் முலையூட்டும் அன்னையுடையவை என கனிந்திருந்தன.
நிழலற்ற உருவென அருகணைந்த அன்னை தன் மின்படையால் அவர்களை தொட்டாள். அறத்தோனாகிய தியானிகனை நெற்றியிலும் துணிந்தோனாகிய பிரபாவனை நெஞ்சிலும். அவர்கள் துள்ளித்துடித்து மெல்ல அடங்க குளிர்தாமரை மலரால் அவர்களை வருடினாள். வலியடங்கி முகம்மலர்ந்து புன்னகையுடன் தாயமுதுண்டு கண்வளரும் மகவினரைப்போல் அவர்கள் உலகுநீத்தனர்.//

வரிகளை வாசிக்கவே இயல வில்லை . வழமை போல தொண்டை இறுகி ,கண்கள் கண்ணீர் பொங்க ...

பிறகென்ன உங்கள் அழைப்பின் பிறகே நிலை மீண்டேன் .

கடலூர் சீனு

Thursday, March 29, 2018

கீதை




ஜெ
இமைக்கணத்தின் வடிவத்தை இப்போது உணரமுடிகிறது. யமன் கேட்கும் ஐயங்களுக்கு கிருஷ்ணன் சொல்லப்போகும் பதில்களாகக் கதைகள் வரும் என நினைக்கிறேன்/ அந்தக்கதைகள் வழியாக கிருஷ்ணனின் மெய்ஞானம் வெளிப்படும். அவைகளில் சொன்னவை வந்துவிட்டன. இனி காட்டில் சொல்லபப்டுபவை. இரண்டும் இரண்டு வகையானவை. ஆனால் ஒரே மெய்மையின் இரு பக்க்ங்கள்

இதை கீதையின் முன்பு வரும் கீதை என நினைக்கிறேன்.

மனோகர்

உபநிஷதம்




அன்புள்ள ஜெ

இமைக்கணம் கிருஷ்ணன் வருகையுடன் ஒரு வடிவத்தெளிவு கிடைக்கிறது. யமன் மகத்தான தர்மசங்கடத்தை அடைந்திருக்கிறார். ராமனில் எழுந்த கேள்வியை கிருஷ்ணனிடம் கேட்கப்போகிறார். அதற்கு அழியாச்சொல் திகழும் இமைக்கணக்காட்டில் கிருஷ்ணன் பதில் சொல்லப்போகிறார். அதுதான் இந்த நாவலின் அமைப்பு

இது ஒரு உபநிஷதம்போலவே உள்ளது. ஒரு நவீன உபநிஷதமாக இது அமையட்டும்

சாரங்கன்

’இமைக்கண’த்தின் ‘காலம்



திருஜெயமோகன் அவர்களுக்கு,
இமைக்கணத்தின் ‘காலம்’ என்ற முதல் மூன்று அத்தியாயங்களும் மிக நன்றாக வந்திருக்கின்றன. ‘இமைக்கணம்’ என்ற பெயரே அருமை.  ஒரு கண்ணிமைக்கும் கணம் அப்படியே காலமின்றி உறைந்து விடுகின்றது.பெரிய கரிய கடல் போல இருக்கும் முடிவிலியில் ஒரு சிறிய குமிழிநிகர் செய்யப்படாமல் அப்படியே உறைந்துநின்று விடுகிறது.  அந்தக் குமிழியில் நடக்கும் கதையாக இந்த ‘காலம்’ என்ற பகுதியைக் கொள்ளலாம்.
தியானிகன்’ என்னும் புழுவுக்கும், ‘பிரபாவன்’ என்னும் பறவைக்கும் நடக்கும் சம்வாதமாக கதைத்தொடங்குகிறது.  புழுவை அந்தணன் என்றும்பிரபாவனை க்ஷத்திரியன் என்றும் கொள்ளலாம்நுண்ணுணர்வுகொண்ட தியானிகன் உலகில் இறப்பு நின்று விட்டதை முதலில் உய்த்துணர்கிறது.  இறப்பு இல்லாததால் survival instinct என்ற அனல் இல்லைஅனல் இல்லாததால் பசியில்லைவிழைவில்லைகாமமில்லைநஞ்சில்லை என்றுஎதுவுமே இல்லாமல் –’இருப்பு’ (existence) மட்டுமே இருந்தது. ‘இருத்தல்’ (living) இல்லை என்று சொல்லிமுடிக்கிறீர்கள்.  கிட்டத்தட்ட தவத்தில் இருக்கும் ஒரு முனிவரின் நிலை இது.  தன்னுணர்வு அற்று இருப்பதால்காலமற்று அகாலத்தில் இருப்பது.  இந்த இடத்தில் எனக்கு புதுமைப்பித்தனின் ‘சாபவிமோசனம்’ கதை நினைவுக்குவந்தது.  ஒரு உணர்வுமின்றி வாளாவிருப்பது.  சிவமாக இருப்பதுஎன்னைக் கேட்டால் இப்படியே சும்மா இருந்துவிடுவதே சரியென்பேன்.  எதற்கு இந்த நிலையில் இருந்து மீள வேண்டும்சும்மா இருப்பதே சுகமல்லவா?
அறத்தோனாகிய அந்த புழுவுக்கு மிகுந்த அக்கறைபிரம்மன் புடவி சமைத்ததன் நோக்கம் தப்பிப்போகிறதென்று.  அதனால் இந்த blissful state-ல் இருந்து normal ஆக வேண்டும் என்று நினைக்கிறதுஉண்மையில்எனக்கு ‘தியானிகனின்’ மீது கோபமாக வந்ததுஅந்த சிறு time freeze அப்படியே நீடித்தால்பூமியைத் தவிர மற்றகோளங்களில் இருப்பது போல உயிர்களிருந்தும்(நாம் நினைப்பது போல் இருந்தால் தான் உயிர் இருக்கிறது என்று அர்த்தமா என்ன?) இல்லாதது போன்ற ஒரு நிலை இங்கும் ஏற்பட்டு விடும் அல்லவாஅதனால் என்ன குறைந்துவிடப் போகிறதுபிரம்மனின் நோக்கமோவேறு எவரின் நோக்கமோ இங்கனம் பிழைத்தால் தான் என்ன?
      ’ஹவனை’ என்ற சொல் மிக அருமை. ‘ஹு-to offer’ என்று வேர்ச்சொல்லில் இருந்து எழுந்த பெயர்.மானுடரின் விழைவை தேவர்களுக்கு கொண்டு செல்லும் தழல் வடிவானவள் ஹவனை என்று தானேஅழைக்கப்பட வேண்டும்.
      அவளின் மோதிரமாகி தரையிறங்கும் நாரதர் புவி இசையின்றி இருப்பதையே முதலில் கவனிக்கிறார்நாரதரை இசையைத் தவிர வேறு எது உண்மையில் கவர முடியும்?  Roller Coaster ride-ல் மேலே போகும்பொழுதைக்காட்டிலும், sudden-ஆக கீழிறங்குவதே thrilling-ஆக இருக்கும்.  வயிறு வாய்க்கு வந்து விடும்.. அதேபோன்றதொரு உணர்வுநாரதர் ஹவனையிலேறி யமனுலகுக்கு இறங்கும் போதும் ஏற்பட்டதுபக்கத்திலிருப்பவரைகெட்டியாக பிடித்துக் கொள்ளவேண்டும் போலிருந்ததுகுறிப்பாக கடைசியில் இருளாக நிற்கும் அகாலனை ஒரேபாய்ச்சலாக நாரதர் தாண்டும் moment-ல் மிகவும் பதற்றமாக இருந்ததுநாரதரை மோதிரமாக அணிந்திருந்தஹவனைஇப்போது ஒரு இறகாகி அவரிடமிருந்து உதிர்கிறாள்.
      தியானிகன் சுண்டி விட ‘டொமினோ’ effect போலபுவியிலுள்ளோர் அனைவரும் தன்னுணர்வு கொள்வதும்,அதன் மூலமாகவேவ்யாதியும்ஜரையும் அவர்களை வெல்வதும் அருமையான உருவகம்வ்யாதியாலும்,மூப்பினாலும் பீடிக்கப்பட்டவர்களுக்கு ம்ருத்யூ தேவியின் கனிந்த பார்வை கிட்டாமல் உழல்வது துயரத்தின் உச்சம்.
      ’காலமற்றசலனமற்றசொல்லற்றஅலைகளற்ற ஆழ்கடலின் அமைதியில் சொக்கிப்போய் கண்சொருகிகிடப்பவன்’ – இனி திசை முழுவதையும் மறைத்துக்கொண்டு பேருருவனாகக் கிடக்கும் ரங்கநாதனை மனக்கண்ணில்காணும் ஒவ்வொறு முறையும் இவ்வரியை நினைத்துக் கொள்வேன்.
      அவனாகிக் கிடக்கும் அவ்வாழ்கடலின் ஒரு அலை ராமன்அவன் சொல்லாததையும்செய்யாததையும்சாதிக்க வரும் மற்றொரு அலை கண்ணன் –இதுவும் இனிக்கும் மற்றொரு உருவகம்.
      யமனைத் தன் கடமைக்குள் அமைத்து விட்டுநாரதர் இந்திரனிடம் திரும்பிச் சென்று ‘துலாமுள்’ மீண்டும்நிகரானது’ என்று சொல்வது; ‘குமிழிகள் உருவாகலாம்ஆனால் அவை உடைந்து மீண்டும் பெருக்குடன் ஒன்றுசேர்ந்து இருந்த இடம் தெரியாமல் மறைந்து விட வேண்டும்’; ‘அழுக்கைக் களைந்து நன்னீராடி புத்துடல் கொள்வதுஅனைத்துயிருக்குமான உரிமை’-இவ்வரிகள் இப்பகுதியின் சிகரங்கள்.
      இமைய முகடுகளை நோக்கிக் கொண்டு சொல்லொடுக்கி இருந்தது இங்கனம் மிகச்சிறந்த வரிகளாகத்திகைந்துள்ளது.
நன்றி,


கல்பனா ஜெயகாந்த்.