ஜெ
நான் சாங்கிய யோகம்
தொடங்குமென எதிர்பார்த்துக்கொண்டே இருந்தேன். சாங்கிய யோகத்தின் ப்ரிலூட் போலவோ அல்லது
எபிலோக் போலவோ ஒரு பகுதி வந்திருக்கிறது. இதன் வரிகளை சாங்கிய யோகத்துடன் இணைத்து வாசித்தேன்.
சிலவரிகள் அப்படியே அங்கிருந்து எடுத்தாளப்பட்டுள்ளன. சிலவரிகள் சற்று மாற்றப்பட்டுள்ளன.
சிலவரிகள் அதிலே உள்ள வரிகளை விளக்குவதற்கு மேலும் சில உதாரனங்களை அளிப்பதுபோல உள்ளன.
முக்கியமாக அதை இன்று வாசிக்கும்போது ஏற்படும் கேள்விகளுக்கான பதில்களாக இது உள்ளது.
இந்த அமைப்புதான் இந்நாவல் இப்படி எழுதப்படுவதற்கே காரணமான அடிப்படை என இப்போதுதான்
பிடிகிடைக்கிறது
பிரபாகர்