அன்புள்ள ஜெயமோகன்
வம்சப்பட்டியலைப்பற்றிய
பேச்சுக்கள் இந்தத்தளத்திலே இருந்தன. அது இல்லாமல் மகாபாரதமே இல்லை. மகாபாரதமே ஒரு
வம்சகதைதான். ஆனால் வெண்முரசு போன்ற ஒரு நவீனப்படைப்பிலே அது மீண்டும் மீண்டும் வரும்போது
வேறுவேறு அர்த்தங்கள் உண்டாகின்றன
குருவம்சப்பட்டியல்
முதற்கனல் தொடங்கி வந்துகொண்டே இருக்கிறது. அது திரும்பத்திரும்ப வெவ்வேறு இடங்களிலே
வரும்போது அந்த வம்சம் நினைவுபடுத்தப்பட்டு பலவகையான அர்த்தங்கள் உருவாகின்றன. அதில்
பாதிப்பேரின் கதைகள் சொல்லப்பட்டுவிட்டன. அந்தக்கதைகளெல்லாம் ஒட்டுமொத்தமாக ஞாபகம்
வருகின்றன. முதலில் வெறும்பெயராக இருந்தவர்கள் சட்டென்று கதாபாத்திரமாக மாறினார்கள்.
இந்தப்பட்டியல்களை
வாசிக்கையில் ஒவ்வொருவரும் ஒரு பெரிய திரள் ஒரு கூட்டத்திலே ஒருவரை ஜூம் பண்ணி கதைசொல்வதுபோல
தோன்றுகிறது ஒவ்வொரு கதை சொல்லும்போதும் ஒட்டுமொத்தமாகப்பார் என்று சொல்வதுபோலிருக்கிரது.
இது ஒருமனிதனின் கதை அல்ல. சிலருடைய கதை அல்ல. பாரதவர்ஷத்தின் ஒட்டுமொத்தக்கதை என்று
இந்தப்பட்டியல்தான் சொல்லிக்கொண்டே இருக்கிறது
எனக்கு ஆரம்பத்தில்
என்ன இது என தோன்றியது. இன்றைக்கு அந்தப்பட்டியல் ஒலிக்க ஆரம்பித்ததுமே ஒரு பெரிய அதிர்வு
உருவாகிறது
ராஜசேகர்