சுலபை பீஷ்மரின் பொருட்டு கேட்கும் கேள்விகள் இவை . எல்லாமே அறிவியலில்
பணியாற்றும் எனக்கு அடிக்கடி எழும் கேள்வி.]
செயல் செய்யச்செய்ய பெருகும். அறியும் செயலுக்கு ஏற்ப அறிவு மாறு.
அப்படியென்றால் செயலால் என்னபயன்? [அறிபவனுக்கேற்ப தன்னை காட்டும் இப்புடவியை அவ்வண்ணம்
முடிவிலாது அறிவதனால் என்ன பயன்?]
அறிபவனும் நிலையறறவன் அறிபொருளும் நிலையற்றது என்றால் அறிவு என்று
நிலையாக ஏதேனும் உண்டா? [அலையில் ஆடும் தோணியில் நிற்பவன் நிலையாக எதைப் பார்த்திருக்கமுடியும்?]
காமகுரோதமோகம் கொள்ளாத மனமே இல்லை. அந்த மனதில் எப்படி தூய உண்மை
உருவாக முடியும்? [புயல்கொந்தளிக்கும் மரக்கிளையில்
எப்பறவை வந்தமரும்?]
நாம் காணும் உண்மைகள் எல்லாமே நம்மில் தெரியும் துளிகள். நிலையற்றவை
[குமிழியில் நகரம்]
நாம் ஓர் உண்மையை அது திகழும் ஒரு material reality யைத் தவிர்த்து
அறியவே முடியாது. அப்படியென்றால் அதற்கு ஏன் முயற்சி செய்யவேண்டும்? [கலத்தில் பால்]
நாம் அறியும் உலகை நம் செயல்மூலம் நாமே கலைத்துக்கொண்டும் இருக்கிறோம்
[மீன் வாலால் குட்டையை கலக்குவது போல]
இந்தக்கேள்விகள் எல்லாமே எனக்கும் உரியவை. இன்றைய அறிவுத்துறையில்
உள்ளவை Sorry to say, பதில்கள் எனக்கு இன்னும் convince ஆகவில்லை. ஒரு absolutist statements ஆகவே உள்ளன.
மாதவ்