ஜெ
சென்ற சித்திரை விழாவுக்கு மதுரைக்குச் சென்றிருந்தேன்.
நான் சென்று நீண்டநாட்களாகின்றன. இப்போது வயதும் நாற்பத்தாறு. ஆனால் விழா எனக்கு பெரிய
களியாட்டமாக இருந்தது . மிகப்பெரிய சலிப்பையே தரும் என நினைத்திருந்தேன். போகவே கூடாது
என்று நினைப்பேன். நாலைந்து ஆண்டுகளுக்கு முன்புகூட குடும்பத்தில் எல்லாரும் போனபோது
நான் போகவேண்டாம் என நினைத்தேன். ஆனால் இன்றைக்கு அவ்வளவு கொண்டாட்டம். அது ஏன் என்று
நினைத்துக்கொண்டே இருந்தேன். இன்றைக்கு வெண்முரசில் இந்த வரியை வாசித்தேன்.
ஆச்சரியமென்ன என்றால் நான் பன்னிருபடைக்களத்தை
இருதடவை வாசித்தவன். இந்தவரியை இப்போதுதான் காண்கிறேன். இப்படி வெண்முரசில் இருந்து
கண்டுபிடித்துக்கொண்டே இருக்க ஏராளமாக உள்ளது. இந்த வரி அப்படியே என் உள்ளத்தைச் சொல்வதுபோல
உள்ளது
ஜே .எஸ். கிருஷ்ணன்