ஜெ
வெண்முரசில் இமைக்கணம் பகுதியில் எது யோகம் என்று
தொடர்ச்சியாக வந்துகொண்டே இருக்கிறது. --- என்பதே யோகம் எனப்படும் என்று சொல்லப்படும்
வரிகளை மட்டும் தனியாகப்பிரித்து தொகுத்தால் ஒரு பெரிய சித்திரம் கிடைக்கும் என நினைக்கிறேன்.
அதில் முதன்மையான வரி முதலிலேயே வந்துவிடுகிறது.
தனக்கென
ஒருவர் அறிவதும் அனைவருக்கென அனைவரும் அறிவதும் ஒன்றென்று அமையும் நிலையே யோகம். யோகம் எதிரெதிர் நிற்கும் இருமுனையிலும் ஒன்றே நிலைகொள்வது.
பின்னர் பலவகையான
வரிகள் வந்தாலும் இந்த வரிகள் பொருள்விரிவு கொண்டவை என நினைக்கிறேன். நாம் அனைவருக்குமே
பொது உண்மை வேறு நாமே உள்ளூர உணரும் உண்மைஅ வேறு. இரண்டும் ஒன்று என்று அமையும்போதுதான்
சிந்தையும் செயலும் யோகம் என்று ஆகிறது. காந்தி அதனால்தான் கர்மயோகி
சாந்தகுமார்