அழகென்பது அது அல்லவா? தன்னை அழகென வெளிப்படுத்தி நம்முடன் ஒளிந்தாடுகிறதா அது? அழகென்பது அதற்கு ஓர் அணித்திரை மட்டும்தானா? என்று திரௌபதி இளைய யாதவரிடம்
கேட்கும் இடம் நானே நினைத்துள்ள கேள்வி.
சர்வமங்களனாக கண்ணனை நினைப்பதுதான் எங்கள்
குடும்பத்தின் வழக்கம். ஆனால் கொடுமைகளைக் காணும்போது இதெல்லாம் கண்ணனின் லீலையா என்ற
எண்ணமும் வரும். அந்த அழகுத் தோற்றத்துடன் இதையெல்லாம் இணைத்துக்கொள்ளமுடியாமல் மனம்
குமைவதுண்டு.
அதற்கு
கண்ணன் எந்தப் பாதை ஒவ்வொரு அடியிலும் இது சரியே எனச் சொல்கிறதோ அதுவே சரியான பாதை. என்று பதில் சொல்கிறான். அழகுநாடும் மனம் படைத்தவர்களுக்கு
அழகுதான் பாதை. சர்வமங்கலமாக இந்தப்பூமியையும் பூமிநாதனையும் பார்ப்பதுமட்டும்தான்
அவர்களுக்கு இருக்கும் ஒரே வழி
சித்ரா