ஜெ
ஒவ்வொரு நாவலின் இடைவெளியிலும் நான் நீலம்
நாவலை சென்று வாசிப்பதுண்டு. அதைச் சரியாக வாசிக்கவில்லை என்ற எண்ணம் இருந்துகொண்டே
இருப்பது ஒரு காரணம். அதோடு அந்த காலண்டர் என் வீட்டில் இருக்கிறது. ஆண்டு முடிந்தாலும்
அதை மாற்றாமல் அப்படியே வைத்திருக்கிறேன். வெண்முரசு ஓவியங்களில் அதுதான் கிளாஸிக்.
எல்லா ஓவியங்களுமே உச்சகட்ட கிரியேட்டிவிடியுடன் இருந்தன. நீலம் படிக்கும்போது எல்லா
அத்தியாயங்களிலுமே ஒரு பெரிய குதூகலம் ஏற்படுகிறது. ஒரு மகத்தான விஷயத்தை செய்வதுபோல
நிறைவு. நீலத்தில் கிருஷ்ணனுக்கு ராதை அவனைச் சுட்டிக்காட்டி கிருஷ்ணன் என்கிறாள்.
அவன் அவளைச் சுட்டிக்காட்டி ராதை என்கிறான். நான் அடிக்கடி போய் வாசிக்கும் இடம் அது.
அந்த கண்ணனுக்கு அழிவே கிடையாது
மனோகர்