Wednesday, June 6, 2018

யுதிஷ்டிரரின் போர்வஞ்சினம்



ஜெ

யுதிஷ்டிரரின் போர்வஞ்சினம் மிக இயல்பாக நிகழ்கிறது. அவரை போர்வஞ்சினம் உரைப்பவராக எண்ண முடியவில்லை. அவர் அதற்கெல்லாம் அப்பாற்பட்டவர் என்றே மனம் எண்ணியிருந்தது. அதோடு அவர் போருக்கு எதிரான மனநிலையுடன் மட்டுமே தொடர்ந்து இருந்தும் வந்தார். அவர் போர்வஞ்சினம் உரைக்கத்தொடங்கியதும் மெல்ல அந்த உணர்ச்சிக்கு ஆளாகி பேசி முடிக்கையில் மிக ஆத்மார்த்தமான பேச்சு என்ற எண்ணம் எழுந்தது. அவரைப்போன்ற ஒரு பெரிய கதாபாத்திரம் அப்படிப்பட்ட ஒரு வஞ்சினத்தை உரைப்பது இயல்பானதே என்று தோன்றியது. அதோடு அவர் வஞ்சினத்தில் பாஞ்சாலியின் அவைச்சிறுமை பற்றி ஒன்றுமே சொல்லவுமில்லை என்பதையும் நினைத்துக்கொண்டேன்

ரவிக்குமார்