Monday, June 4, 2018

விளையாட்டு




ஜெ

இளைய யாதவர் மீண்டும் அதே விளையாட்டுத்தனத்துடன் இருப்பது முதலில் விசித்திரமாக இருந்தது. கொஞ்சம் குழப்பமாகவும் இருந்தது. ஏனென்றால் அவர் இந்திரநீலம் நாவல் வரைக்கும்தான் இந்தக் கதாபாத்திர குணங்களுடன் இருந்தார். அதன் பின்பு அவருடைய கதாபாத்திரம் அதிகமாக வரவில்லை. பன்னிருபடைக்களத்தில் சிசுபாலனைக்கொல்லும்போதே மாறிவிட்டார். அதன்பிறகு இருண்டவராக தமோகுணத்தில் மூழ்கியிருந்தார். மீண்டும் பெரும் கொலைகாரராக எழுந்தார். தத்துவம் பேசும்போதும் வரவிருக்கும் அழிவைத்தான் சொன்னார். அவருடைய குலம் அவரை கைவிட ஆரம்பித்ததுமே அவருடைய விளையாட்டுத்தனம் திரும்பிவராதபடி போய்விட்டது என்பதுதான் என்னுடைய புரிதலாக இருந்தது. அவர் மீண்டும் சிறுவர்களுடன் விளையாடுபவராக வரும் காட்சியைப்புரிந்துகொள்ள முடியவில்லை. நாங்கள் சிறுநண்பர்குழு ஒன்று இதைப்பற்றி பேசிக்கொள்வோம். வாட்ஸப்பில். அதில் மூத்த நண்பர் ஒருவர் அவர் போரை ஒரு விளையாட்டாகச் செய்யப்போகிறார் என்று சொன்னார். அது பொருத்தமானதாகவே இருந்தது. நான் இரண்டாவது அத்தியாயத்தில் அவர் சொல்லும் ஒரு வரியில் அதைப்புரிந்துகொண்டேன். இளையவர்கள் போரில் சாகவிருப்பதைப்பற்றி தருமன் வருந்திச்சொல்லும்போது எனக்கு அனைவரும் சமம்தான், பலிகொள்பவன் நானே என்று அவர் சாதாரணமாகச் சொல்கிறார். இனி அவர் விளையாடப்போகிறார். விளையாட்டில் கோபமும் இல்லை. வன்மமும் இல்லை. பிள்ளைகளுடன் ஒருவராக அவர் விளையாடுவது அதைத்தான் காட்டுகிறது

எஸ்.மாணிக்கம்