ஜெ
அரசியரின் வாழ்க்கை பற்றி தன் செவிலி சொன்னதை பானுமதி நினைத்துக்கொள்கிறாள்
அவர்கள் வாழ்ந்தது அரசியர் என மணம்கொள்ளும் வரை மட்டுமே. காட்டில் பூத்துநின்றிருக்கும் மரத்தை வெட்டிச் செதுக்கி இழைத்து அணிக்கோல் என்றாக்குவதே அதன்பின் நிகழ்வது
அழகான உவமை. ஆனால் குரூரமான உண்மை. அத்தனை பெண்களுக்கும் மனசின் ஆழத்தில் தெரிந்த உண்மை அது. அரசியர் மட்டும் அல்ல எல்லா பெண்களுக்கும் வாழ்க்கை அப்படித்தான்
ராதா ஜானகிராமன்