ஜெ ,
மழைப்பாடலில் சகுனியின் பாத்திரம் வர துவங்கும் போதே அவன் பெரிய பெரிய கட்டிடங்களை உருவாக்கும் சித்திரம் வந்து விடுகிறது , அந்த கட்டிடங்கள் அங்கு தேவையற்றவை , இருப்பினும் கட்டுகின்றான் எனும் சித்திரம் வருகிறது , அவனது அதிகார வேட்கை க்கு அந்த நிலம் போத வில்லை என்பதை இந்த சித்தரிப்புகள் சொல்கின்றன என உங்கள் அயன் ராண்ட் கட்டுரைகள் படித்த போது தோன்றியது . ஆனால் சகுனிக்கு அதிகாரம் மீது அமரும் ஆசையில்லை , தன் எல்லைகளை விரிவாக்கி கொள்வது மட்டுமே விருப்பம் , அதாவது மத்தகம் மீது அமர்பவனாக அல்ல , தன் துருத்தியால் யானையை கட்டு படுத்தும் பாகன் போன்றதொரு அதிகாரம் . தன் முனைப்பற்ற அதிகார மனநிலை என சொல்லலாம் , அதனால்தான் பாரத நிலபரப்பின் மன்னனின் மாமனாக எனும் அர்த்தத்தில் பீஷ்மர் காந்தாரியை திருதராஷ்டினன்க்காக பெண் கேட்கும் போது சொன்னதில் மனம் சாய்ந்தான் ..
ராதாகிருஷ்ணன்