Wednesday, July 11, 2018

சிறுமையாளன்



ஜெயமோகன் அவர்களுக்கு

குண்டாசியின் பேச்சில் வரும் சந்தர்ப்பங்கள் அனைத்துமே ஆழமானவையாகவும் அதேசமயம் கசப்பும் வெறுப்பும் நிறைந்தனவாகவும் உள்ளன. அவன் தன் மேல் கொண்ட கசப்பையே வெளிப்படுத்துகிறான். ரு சிறுமையை எதிர்கொள்ள முடியாது என்றால் அவன் கொண்டுள்ள பெரியவற்றுக்கு என்ன பொருள்என்று அவன் சொல்லும்போது ஒரு உண்மையைச் சொல்கிறான். அதேசமயம் தன்னை சிறுமையாளன் என்றும் தானே வகுத்துக்கொள்கிறான். அவன் தன்னை ஏன் அப்படி சபையில் வெளிப்படுத்துகிறான் என்பது மிகவும் சிக்கலான கேள்வி

எஸ்.ராஜன்