Sunday, July 29, 2018

பறம்பு



இனிய ஜெயம் 

பறம்பு நீரொலி செய்தது .

கிளி சொன்ன கதைகள் முதல் அத்யாயம் மூன்றாவது பத்தியில் வரும் வரி இது .

பறத்தலை என்றால் இடுகாடு 
பறம்பு என்றால் கொங்கை 
பறம்பு என்றால் சங்க இலக்கிய மலை ஒன்றின் பெயர் .

தேடினால் இந்த மூன்று பொருள் மட்டுமே கிடைக்கிறது .


நீங்கள் சுட்டிய பறம்பு , வீட்டு பறம்பு இவற்றை தோட்டம் என்று கொள்ள வேண்டுமா



கடலூர் சீனு

அன்புள்ள சீனு

பறம்பு என்றால் சோலை அல்லாத  விளைநிலம், தோட்டம் என்று பொருள். மலையாளத்தில் இன்றும் அப்பொருள்தான். தமிழிலும் அதேபொருள்தான்

ஜெ