Sunday, July 15, 2018

ஆண்களின் சிறுமை



“அப்போது அங்கிருந்த ஆண்களின் கண்கள்… ஆம், அங்கிருந்த அத்தனை கண்களும்…”  என்ற விகர்ணனின் வரி அவனுடைய குடியின் உளறலாக கடந்து போகிறது. ஆனால் அதுதான் முக்கியமானது. விகர்ணனின் உள்ளத்தை உடைத்துவிட்டது அதுதான். பன்னிருபடைக்களத்தின் அந்த ஆவேசமான சபதத்தையும் அதன் விளைவான போரையும் வேறுபார்வையில் பார்க்கச் செய்கிறது இது. அப்படியென்றால் அந்த ஆண்களின் தரப்பில் நின்று வாளெடுத்திருக்கிறான் விகர்ணன். அந்த சபையில் அவன் பேசியது அந்தக் கண்களுக்கு எதிராகத்தான். அதை இப்போது கடந்துவிட்டான். ஆகவேதான் அப்படிக் கொந்தளிக்கிறான். “பீஷ்மர் அறிவார். ஏனெனில் தன் குருதியை அறியாதவர் எவரும் இல்லை. பீஷ்மருக்குத் தெரியும். தந்தைக்கும் தெரியும். அனைவருக்கும் தெரியும். நான் சொல்கிறேன், ஆயிரம் உபகௌரவர்களுக்கும் தெரியும். ஆண் என பிறந்த அனைவருக்கும் சற்றேனும் தெரியும்” என்று இந்தச்சிறுமையைத்தான் விகர்ணன் சொல்கிறான்

ராமச்சந்திரன்