ஜெ
துரியோதனனும் பானுமதியும் கொள்ளும் உரையாடலை அழகான
அத்தியயாமாக அமைத்துள்ளீர்கள். ஒரு பகடை ஆட்டம்போல இருக்கிறது அது. எதையும் நேரடியாகப்
பேசமுடியவில்லை. ஒரு சில சொற்களைச் சொல்கிறார்கள். உடனே அதிலிருந்து விலகிவிடுகிறார்கள்.
சம்பந்தமில்லாத ஒன்றை உடனடியாகச் சொல்கிறார்கள். இந்த சம்பந்தமில்லாதவை ஏன் நினைவுக்கு
வருகின்றன என்பது முக்கியமான கேள்வி. உதாரணமாக ஏன் அப்போது கலிங்க அரசியைப்பற்றிப்
பேசுகிறான். இருவரும் கொண்ட ரோமாண்டிக் மூடு முழுக்கவே போய்விடும். ஆனால் அதைச் சொல்லி
கொஞ்சம் விலகிக்கொள்கிறார்கள். உடனே மீண்டும் அருகே வருகிறார்கள். அழகான அத்தியாயம்
ராம்