அன்புள்ள
ஜெ
தன்னுடைய
மனதின் ஆழத்திலிருந்த அறியமுடியாத ஒரு கீழ்மையால்தான் குண்டாசி துன்புற்றிருக்கிறான்.
நானும் ஒரு துரியோதன்ன் தானா என்ற சந்தேகமே அவனை அவ்வளவு கீழே கொண்டுசென்றிருக்கிறது.
அதை துரியோதனன் சபையில் எடுத்து வெளியே போடும்போது அவன் துயரப்பட்டிருக்கவேண்டும்.
ஆனால் மென்மையான ஓர் உணர்வுதான் அவனுக்கு ஏற்படுகிறது. இனிமையும் விடுதலையும் தோன்றுகின்றன.
ஆனால் மறுபக்கம் விகர்ணன் அவனுடைய ஆழத்தில் ஏதோ ஒன்றைக் கண்டு குண்டாசியைப்போல வந்தமர்ந்து
குடித்துக்கொண்டிருக்கிறான். மனிதர்கள் போருக்குமுன்னால் கொள்ளும் மனத்திரிபுகள் பயங்கரமாக
உள்ளன. ஒருவர் கூட நார்மலாக இல்லை
மகேஷ்