Tuesday, July 3, 2018

படைகள்




ஜெ

படைகள் கூச்சலிடுவது பற்றிய அத்தியாயம் ‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 26


ஒரு அருமையான கவிதை. அந்த அத்தியாயத்தை இந்தக் கதையிலிருந்து ஒட்டுமொத்தமாகத் தனியாகப்பிரிந்து வாசித்துக்கொண்டிருந்தேன். அது படைகளுக்குச் சாயம்பூசுவதில் ஆரம்பிக்கிறது. ஒவ்வொருவரும் இன்னொருவரை முகம் தெரியாமல் ஆகிறார்கள். ஒருவரை ஒருவர் நோக்கி கூச்சலிடுகிறார்கள். கூட்டமாகவே அலைகிறார்கள். எதுவும் நடக்கவில்லை. ஆனால் எல்லாரும் பிஸியாக இருக்கிறார்கள். ஒவ்வொருவரும் களிவெறிகொண்டிருக்கிறார்கள். பெரும்பாலானவர்களுக்கு அனைவரும் சாகக்கூடும் என்று தெரிந்திருக்கிறது. போர்வீரர்களுக்கு துக்கமே இல்லை. ஒருவகை போதைதான் இருக்கிறது. ஆனால் அவர்களின் குடும்பத்தினர் சோர்ந்து சுருண்டு கிடக்கிறார்கள். நகரம் வீங்கி அசைந்துகொண்டிருக்கிறது. அவ்வளவு செயல்களின் நடுவே இருப்பவர் என்ன ஏது என்று தெரியாமல் ஓர் அறைக்குள் அமர்ந்து தேவையில்லாமல் ஏதோ சுவடிகளை வாசித்துக்கொண்டிருக்கிறார். போர்ச்சூழலின் அபத்தம் மட்டுமல்ல அது. அரசாங்கம் சமூகம் ஆகியவைசெயல்படுவதைப்பற்றிய சித்திரமும்தான்

சாரதி