ஜெ,
சாதாரணமான நிகழ்வாகச் சொல்லப்பட்டாலும் குண்டாசி மயங்கி விழுவதை ஒரு துர்ச்சகுனமாகவே நினைக்கிறேன். அதனால்தான் துரியோதனன் அவ்வளவு நிலைகுலைந்து கொல்லப்போகிறான். அவர்கள் வஞ்சினம் உரைத்து போருக்குச் செல்கிறார்கள். அப்போது அவர்களில் ஒருவன் விழுவதென்பது அவர்கள் எவரும் மீளமாட்டார்கள் என்பதற்கான ஆதாரமாக அமைகிறது.
முன்பு வேள்வியிலும் இதேபோல அபசகுனம் நிகழ்ந்தது. துரியோதனன் தோற்று அழிவான் என்பதற்கான சகுனங்கள் வந்துகொண்டே இருக்கின்றன. அவன் அதையெல்லாம் கணக்கில்கொள்ளாமல் சென்றுகொண்டே இருக்கிறான்
ராஜன்