கவித்துவமும் பித்தும் களிநடனமிடும் மொழி. ஜெமோ தமிழ்க்களித்த மற்றுமோர் செவ்வியல் உச்சம். நூல் நுழைகையில் அலையலையாய் நானறியா கவின் சொற்கள் தாக்க தடுக்க வலுவின்றி தமிழகராதியிடம் சரண்போந்தேன். நல்வேளை நான் சங்ககாலத்தில் பிறந்தேனில்லை இலையேல் புறமுதுகிட்டதற்காய் வடக்கிருந்து உயிர்விட்டாலும் விட்டிருப்பேன். நூல் முடிக்கையில் கமலஹாசன் சொன்னதை நினைந்துகொண்டேன் "ஒன்று நாம் ஜெமோவை போல் எழுதவேண்டும் இல்லை அவரை கொல்லவேண்டும்"
Kumaran Kugathasan
https://www.goodreads.com/book/show/24681099-04