ஜெ,
போரின் நெறி பற்றி ஒரு விவாதத்தைக் கண்டேன். அதை நானும் யோசித்தேன். ஆனால் எனக்குஅப்போது
ஒன்று ஞாபகத்துக்கு வந்தது. சுதசோமன் மந்திராலோசனைக்குப்பின்னர் கடோத்கஜனைப்பார்க்கச்
செல்கிறான். அங்கே கடோத்கனன் போரில் இறந்த அரக்கர்களின் ஞாபகமாக பலிச்சடங்கு செய்துகொண்டிருக்கிறான்.
அதில் அலம்புஷனின் கல்லும் இருக்கிறது. அவன் விரோதிதானே என்று சுதசோமன் கேட்கிறான்.
“ஆமாம், ஆனால் சொர்க்கத்தில் அப்படி அல்ல” என்று அவன் பதில் சொல்கிறான். அங்கே நாங்கள்
தழுவிக்கொள்வோம் என்கிறான். எந்த விரோதமும் அவனிடம் இல்லை. அரக்கர்குலமெல்லாம் ஒன்றாகவே
அவனால் பார்க்கமுடிகிறது. அங்கிருந்துதான் சுதசோமன் போருக்கு வருகிறான். அங்கேதான்
அவன் பீமனின் அந்த போர்வெறியைப் பார்க்கிறான். அந்த வேறுபாடுதான் அவனுக்கு அவ்வளவு
பெரிய கசப்பை அளிக்கிறது
ஸ்ரீனிவாசன்