அன்புள்ள ஜெ
லக்ஷ்மணன் சபையில்
தந்தையைப்பார்த்துக்கொண்டு அமர்ந்திருக்கும் காட்சியின் வர்ணனை மனதை என்னவோ செய்தது.
துரியோதனன் எப்படிப்பட்டவனாக இருந்தாலும் மகத்தான ஒரு தந்தை. அவன் மைந்தர்களுக்கு அவன்மேல்
எவ்வளவும் பிரியம் இருக்கும் என்று ஊகிக்கமுடிகிறது. அவர்கள் அவனுடைய படிப்படியான சோர்வையும்
தளர்ச்சியையும் எப்படிப்பார்ப்பார்கள் என்று ஊகிக்கமுடிகிறது. லட்சுமணன் அணுவணுவாக
தன் தந்தையைப்பார்த்துக்கொண்டே இருக்கிறான். பிறர் பார்க்கும்போது அதை அறியாமல் காற்றில்
எதையோ எழுதி எழுதி அழித்துக்கொண்டிருக்கும் லக்ஷ்மணனின் காட்சி மிகப்பெரிய துயரத்தை
அளிக்கது
சாந்தமூர்த்தி