Tuesday, October 16, 2018

உருவகம்




அன்புள்ள ஜெ

வெண்முரசின் ஒட்டுமொத்தமான கட்டமைப்பைப் பற்றி ஒரு வாசகர் எழுதியிருந்தார். அதை உணர்வது எப்போதுமே நாவல் முடிவடையும்போதுதான். நாவல் ஓடிக்கொண்டிருக்கும்போது தோன்றுவதெல்லாம் கதையின் ஓட்டத்தில் இதில் வந்துகொண்டே இருக்கும் கவித்துவத்தை இழந்துவிடக்கூடாது என்பதுதான். 

இது நாவல் அல்ல, காவியம். காவியமென்பதே கவிதைகளால் ஆனதுதான். என்னைப்போன்றே பலவாசகர்கள் இதிலுள்ள சிறந்த வரிகளையும் உவமைகளையும் குறித்துப்போடுவதுண்டு. ஆனால் எவ்வளவுதான் குறிப்பது என்று விட்டுவிடுவோம். இந்தத்தளத்தில் அப்படி குறித்துப்போடுவதைத்தான் எழுதி அனுப்புகிறோம். இது இங்கே இருக்கட்டும் என நினைக்கிறோம்

இன்றைய அத்தியாயத்தில் யானையைப்பற்றி வரும் இந்தப்பகுதியை யானையை வர்ணிப்பது என்று தாண்டிச்சென்றுவிடுவார்கள். இது யானையைப்பற்றிய ஒரு நவீனக்கவிதை 


என்ற வரிக்கு அறிவியலுண்மை உண்டா என்று பார்க்கமுடியாது. ஆனால் அந்த உருவகம் அபாரமானது. யானையின் துதிக்கைதான் அதன் மனம் என்று நினைக்கையில் உருவாகும் ஒரு பெரிய தரிசனம்தான் இந்தவரிகளைக் கவிதையாக ஆக்குகிறது.

ஜெயராமன்