Sunday, October 14, 2018

யாதவர்களின் பூசல்



https://www.jeyamohan.in/113962#.W8Fn7nszbIU
ஜெ

மௌசாலபர்வம் வெண்முரசில் அனேகமாக அடுத்தாண்டு இறுதியில்தான் வரும். யாதவர்கள் ஒருவருக்கொருவர் அடித்துச் செத்துப்போவார்கள். மகாபாரதத்தில் அது ஏன் நிகழ்ந்தது என்பதெல்லாம் இருக்காது. முனிவரின் சாபம் என்று மட்டுமே இருக்கும். ஆனால் வெண்முரசு இந்திரநீலம் முதலே அதற்கான கட்டமைப்பை உருவாக்கிக்கொண்டே செல்கிறது.

இன்றைய அத்தியாயத்தில் யாதவர்களின் நடத்தையும் பேச்சும் அது எங்கே செல்கிறது என்பதைக்காட்டுகிறது.அது அவர்களின் தீய இயல்பாக அல்லாமல் அவர்களின் தொழிலில் இருந்து அவர்களுக்கு உருவாகிவந்த தனித்தன்மை என்று நாவல் காட்டுகிறது. அவர்கள் சிறிய குழுக்களாக பிறருடன் தொடர்பில்லாமல் இருந்துகொண்டிருக்கிறார்கள். ஒவ்வொருவரும் தாங்களே தலைவர்கள் என்று எண்ணுகிறார்கள். தங்களுக்குமேல் பொதுவாக ஒரு தலைவரை ஏற்றுக்கொள்வதற்கு அவர்களுக்கு அவ்வளவு தயக்கம் இருக்கிறது.

கிருஷ்ணன் போன்ற ஒரு மாபெரும் தலைவன் கிடைத்தபின்னரும்கூட ஏன் யாதவர்கள் இவ்வாறு அடித்துக்கொண்டு செத்தார்கள் என்பதற்கான விடையை இப்படி குலவரலாறுகள், குலமனநிலைகளுக்குள் சென்று பார்க்கிறது. இந்த அத்தியாயத்தில் யாதவர்களின் ஆணவமும் சிறுமையும் வெளிப்படுகிறது. அதுகூட அவர்களின் ஒரு வகையான அப்பாவித்தனமாகவே தோன்றுகிறது

சாரங்கன்