ஜெ
பீமனின் கொலைவெறியை வாசித்தபோது அவன் போரில் முழுமையாகவே ஈடுபட்டுவிட்டான் என்பதும் எப்போதும் அவனிடமிருக்கும் நஞ்சு வெளியாகிறது என்றும் தெரிந்தது. இங்கே இருந்துகொண்டு வெண்முரசின் ஒட்டுமொத்தத்தையும் வாசிக்கும்போது பீமன் முதல்முறையாக கௌரவர்களால் கங்கையில் வீசப்பட்டு மூழ்கி நாகருலகத்திற்குச் சென்று நஞ்சு அருந்தி மீள்வது நினைவுக்கு வந்தது. நஞ்சு அவனுக்குள் இருந்துகொண்டே இருக்கிறது. அது வெளியே வருகிறது. நாவல் முழுக்க பீமன் நேரடியாக இந்த இடம்நோக்கி வந்துகொண்டேதான் இருக்கிறான்
ஜெயராமன்